பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்பேரில், சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி மகளிர் கல்லூரியிலும் மாணவ, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர், பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், வங்கிக் கணக்குகளின் ரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும், முகாந்திரம் இல்லாமல் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும் கூறினார். மேலும் அவர், ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், பரிசுப் பொருள்கள் விழுந்துள்ளதாக வரும் எந்த ஒரு அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள், லிங்க்குகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் கூறினார். தொடர்ந்து அவர், உதவி தொகை மோசடி, நிதி மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930 மற்றும் http://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும், பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் மாணவ, மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
