சென்னை நெற்குன்றத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் - மாநகராட்சி தகவல்
சென்னை, நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “ஐகோர்ட்டு உத்தரவின்படி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-145, நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடத்தில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டிடம், மாநகராட்சியின் அலுவலர்களால், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து இன்று (12.12.2025) ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
