வத்தலக்குண்டு அருகே புரவி எடுப்பு திருவிழா.. பைரவர் சிலையை சுமந்து வந்த இஸ்லாமியர்
வத்தலக்குண்டு அருகே காவல் தெய்வங்களை வழிபடும் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா, 200 ஆண்டுகளாக பாரம்பரியம் மாறாமல் நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் அய்யனார், கன்னிமார், சடையாண்டி, வேட்டைக்காரன், கருப்புசாமி மற்றும் குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களின் மண் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. ஊர்வலத்தில் கிராம வழக்கப்படி இஸ்லாமிய சகோதரர் ஒருவர் கால பைரவர் சிலையை சுமந்து வந்தார். 21 சிலைகளுடன் கிராமத்தின் பல்வேறு வீதிகள் வழியே வந்த இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பள்ளிவாசல் பகுதியில் ஊர்வலம் வந்தபோது இஸ்லாமியர்கள் பழங்களை கொடுத்து வரவேற்றனர். புரவி எடுப்பு திருவிழாவின் நிறைவில் சிலைகள் அனைத்தும் சோலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. தங்கள் முன்னோர்கள் கற்றுத் தந்த பாரம்பரியம் மாறாமலும், கிராம மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கிய இந்த திருவிழா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
