வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு.. டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாப பலி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித் (வயது 35). இவரது கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தவர் பாலகுரு (50). டீக்கடைக்கு வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்கவிடப்பட்டிருந்தது. இன்று காலை சீரியல் பல்பு, கடையில் உள்ள இரும்பு கம்பியில் உரசிக் கொண்டிருந்தது.அப்போது, சீரியல் பல்பு தொங்கிக் கொண்டிருந்த மின் வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை தற்செயலாக தொட்ட பாலகுரு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் ரஞ்சித் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோயினர். இதுகுறித்து, வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
