திருக்கார்த்திகை பண்டிகை.. தூத்துக்குடியில் பனை ஓலை விற்பனை விறுவிறுப்பு
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படும். அன்றைய தினம் இரவில், வீடுகள் தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், பனைஓலை கொழுக்கட்டை உள்ளிட்டவை தயார் செய்து படைத்து வழிபடுவதும் வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே பஜார் கடைகளில் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அகல் விளக்குகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். அதேபோன்று கொழுக்கட்டைகள் தயார் செய்வதற்காக பனை ஓலைகளும் ஏராளமாக விற்பனைக்காக ஆங்காங்கே சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இருந்து பனை ஓலைகள் அதிகளவில் விற்பனைக்காக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.50 முதல் முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் ஆர்வமுடன் பனை ஓலைகளை வாங்கி செல்கின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
