மாற்றுத்திறனாளிகள் கலைஞரை ரோல் மாடல் ஆக எடுத்துச் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மட்டும் இதுவரை 60க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் அரசியல், சமூக உரிமைகளை நிலைநாட்ட முக்கிய சட்டத்தை கொண்டு வந்தோம். அரசு இல்லங்களில் தங்கி படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.உள்ளாட்சி பதவிகளில் மாற்றுத்திரனாளிகளுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறோம்.சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான குரலை உருவாக்கி கொண்டிருக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் வெறும் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக மாறப்போகிறீர்கள். மாற்றுத்திறனாளிகள் மனுக்களை மட்டும் அளிக்காமல் இனி மனுக்களை பெறப்போகிறீர்கள்.ஒவ்வொரு ஊரிலும் இருக்க கூடிய மாற்றுத்திறனாளிகளின் குரலை நீங்கள் எதிரொலிக்க வேண்டும். ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் தன்னம்பிக்கையை உருவாக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் .இதை மற்ற மாநிலங்கள் முன்னெடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எந்த நிலையிலும் சோர்வடைந்து விடக்கூடாது.பிற்போக்குவாதிகளின் குரலை காதில் வாங்கி கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். கருணாநிதிக்கு ஒரு விபத்தில் ஒரு கண் பார்வை பறிபோனது. ஆனாலும் விடாமல் உழைத்தார். சக்கர நாற்காலியில் இருந்தபோது கூட சுற்றிச்சுழன்று உழைத்தார். அந்த வில் பவர் உங்களுக்கும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
