கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
சென்னை,‘டிட்வா’ புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரில் சென்று மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் ஆய்வு செய்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்வதோடு, விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் ஆய்வு செய்ததாக போலியான வீடியோவை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
