கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்களுக்கு கட்டுப்பாடு
பழனி, பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்புடன் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 6.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதையடுத்து யாகசாலையில் இருந்து பரணி தீபம் மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரணி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் 6 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரருக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து 6.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகார உலா நிகழ்ச்சி நடந்தது. பின்பு 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவில் இன்று (புதன்கிழமை) பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சைபூஜை, மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் உலா வருகிறார். தொடர்ந்து மலைக்கோவிலின் நான்கு திசைகள் மற்றும் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, சொக்கப்பனை கொளுத்துதல் ஆகியவை நடக்கிறது. பக்தர்களுக்கு கட்டுப்பாடு கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் கார்த்திகை திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதில் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, பிற்பகல் 2 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவு வாயில் தற்காலிகமாக அடைக்கப்படும். தொடர்ந்து மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
