சென்னை மெட்ரோ ரெயிலில் நவம்பர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் 92 லட்சத்து 86 ஆயிரத்து 753 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். இதே போல, ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேரும், ஆகஸ்டு மாதத்தில் 99 லட்சத்து 9 ஆயிரத்து 632 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேரும், அக்டோபரில் 93 ஆயிரத்து 27 ஆயிரத்து 746 பேரும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். அதிகபட்சமாக, நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 342 பேர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த மாதம் பயண அட்டையை பயன்படுத்தி 60 ஆயிரத்து 317 பேரும், கியூ-ஆர் குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி 43 லட்சத்து 77 ஆயிரத்து 951 பயணிகளும் பயணித்துள்ளனர். மேலும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 48 லட்சத்து 48 ஆயிரத்து 485 பயணிகள் மெட்ரோ ரெயிலில் சென்றுள்ளளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
