கனமழையால் தேங்கியுள்ள மழை நீரை விரைவாக அகற்ற வேண்டும் - பிரேமலதா வலியுறுத்தல்
சென்னை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் "டிட்வா" புயல் வலுவிழந்திருந்தாலும் அதன் தாக்கம் காரணமாக தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழையால் அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி மக்களை மிகவும் சீரமத்திற்கு உள்ளாகியுள்ளது. குண்டும் குழியுமாக உள்ள பல சாலைகள் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வீடுகளுக்குள் மழை நீர் புகுவதினால் நோய்தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் வருவதனால் மக்கள் அச்சதுடன் இருக்கின்றனர். இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தொடர் மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து, அவர்களுக்கு தேவையான உணவு, மாத்திரை மருந்து உடை போன்ற பாதுகாப்பு வசதிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் வழங்க வேண்டும். எனவே அந்தந்த பகுதியில் இருக்கும் நமது கழக நிர்வாகிகள் நேரடியாக கள ஆய்விற்குச் சென்று "நம்மால் முடிந்த உதவிகளை" மக்களுக்கு செய்து, ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சுரங்கப் பாதைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக ராட்சத இயந்திரங்களை கொண்டு அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
