வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி; கிராமத்தையே உலுக்கிய துயரம்
வேலூர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (55) - மல்லிகா(50) தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ்(23), ஜீவா (22) என்ற 3 மகன்கள் இருந்தனர். இதில், மூத்த மகன் விகாஷிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஜீவா தந்தைக்கு உதவியாக ஊரிலேயே நர்சரி வைத்து பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், விடுமுறையை ஒட்டி லோகேஷ் ஊருக்கு வந்திருந்தார். ஜானகிராமன் தனது 3 மகன்களையும் அழைத்துக்கொண்டு நேற்று இரவு வயலுக்கு சென்றுள்ளார். இரவு நேரங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் அவற்றை நோட்டமிடுவதற்காக அங்கு 4 பேரும் தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளனர். அப்போது தந்தை ஜானகிராமன் அருகில் இருந்த விவசாய நிலத்தில் வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மகன்கள் மூவரும் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், தந்தையுடன், விகாஷ் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2வது மகன் லோகேஷ் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பை துண்டிக்கச் செய்தனர். இதனையடுத்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, படுகாயமடைந்த லோகேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன்கள் என 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராமமே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
