முதுகுளத்தூரில் சிவன் கோவில் கும்பாபிஷேக விழா
முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள சிவன்- விஷ்ணு திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி மங்கள இசை, கணபதி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், பூர்ணாஹுதி, தீபாராதனை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, சிவன், விஷ்ணு கோவில்களை வலம் வந்தது. அதன்பின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி -தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. முதுகுளத்தூர், கடலாடி, பரமக்குடி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
