தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கல்யாணி (வயது 24) என்பவர், கடந்த 1.11.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார். தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ணபெருமாள்(26) என்பவர், கடந்த 27.10.2025 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார். தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் முருகன்(எ) ஸ்டீபன்(43) என்பவர், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார். மேற்சொன்ன 3 பேரையும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் நேற்று (1.12.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 134 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
