மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி நிர்வாக அதிகாரி கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 54) என்பவரிடம் திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த செய்யது அகமது கபிர்(41) என்பவர், ESIC (Employee State Insurance Corporation) மருத்துவமனையில், நிர்வாக அதிகாரியாக (Administrative Officer) ஆக வேலை செய்வதாக ஏமாற்றி, கோபாலகிருஷ்ணனின் மகளுக்கு, ESIC மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து செய்யது அகமது கபிர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோபாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் அளித்தார். அதன் பேரில், புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் கோபாலகிருஷ்ணன், செய்யது அகமது கபிர் என்பவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றப்பட்ட விவரம் உண்மை என தெரிய வந்தது. அதன் பேரில் 14.10.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், செய்யது அகமது கபிர் என்பவரை இன்று (2.12.2025), மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர், தலைமை காவலர்கள் முத்துராமலிங்கம் மற்றும் கலையரசன் ஆகியோர் சேர்ந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றவாளியை சிறப்பாக செயல்பட்டு, கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
