ஒபிஎஸ் டெல்லிக்கு திடீர் பயணம்: பாஜக தலவர்களை சந்திக்க திட்டமா?
சென்னை,முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். கடந்த 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர் செல்வம், அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதிமுகவின் இந்த நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலை உள்ளது. வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட போகிறோம். எனவே டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ஓ பன்னீர் செல்வம் டெல்லியில் இரண்டு நாட்கள் முகாமிட்டு பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியும் இன்று மதியம் டெல்லி சென்றுள்ள நிலையில், ஓ பன்னீர் செல்வத்தின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஓ பன்னீர் செல்வத்தை இணைக்கும் முயற்சியில் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளதா? என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
