திருநெல்வேலி: முதியவர் கொலை வழக்கில் குற்றவாளி விரைந்து கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய சரகத்தில், நேற்று (1.12.2025) பெருமணல் கிராமத்தில், அந்தோணி இன்னாசி மகிமை தாசன் (வயது 77) என்ற முதியவர், அவரது வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது சம்பந்தமாக, கூடங்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்தனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ் சிங் மற்றும் போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இறந்து போன முதியவருடைய நெருங்கிய உறவினரான, அதே ஊரைச் சேர்ந்த சிலுவை அந்தோணி என்பவரது மகன் பிரேம்குமார்(50) என்பவருக்கும், இறந்து போன நபருக்கும் இடையே, கடந்த (30.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, இறந்து போன நபருடைய வீட்டில் வைத்து ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக, பிரேம்குமார் என்பவர் அந்தோணி இன்னாசி மகிமை தாசனை தாக்கி கொலை செய்த விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளியின் விபரம் தெரியாத இந்த வழக்கில், காவல்துறையின் நுரித நடவடிக்கையால் குற்றவாளியின் விபரம் கண்டறியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், காவல் அதிகாரி மற்றும் காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
