ஜெயங்கொண்டம் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கும்பாபிஷேகம் செய்ய முன்வந்தனர். அதன்படி திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்தது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
