கயத்தாறில் மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தேவர் நகரில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 40), திருமணமாகாதவர். இவர் ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கயத்தாறு இரட்டைகுளம் அருகே உறவினர் தாமஸ் என்பவருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். சிறிது நேரத்தில் தாமஸ் அவரது வீட்டிற்கு சென்று விட்டார். இரட்டைகுளம் அருகே மதுகுடித்த இடத்தில் அமர்ந்திருந்த அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை தேடிச் சென்றனர். அப்போது அவர் சாலையில் தலைகுப்புற கிடந்தார். உறவினர்கள் அவரை தூக்கி பார்த்து போது இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்த அவர் நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற விழுந்ததில் இறந்து போனதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
