புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம்
புதுச்சேரி, இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக இவ்விவகாரம் தொடர்பாக 'அனைத்துக் கட்சி கூட்டத்தை' கூட்டியது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தி.மு.க. சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுபோல, மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த நிலையில், புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, தேர்தல் பணியாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 4-ந்தேதி வரை நடைபெற உள்ள நிலையில், டிசம்பர் 9-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதில் ஆட்சேபணை மற்றும் உரிமை கோரல் ஜனவரி 8-ந்தேதி வரை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 7-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
