திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிசேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்

  தினத்தந்தி
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிசேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் பூர்வ ஜென்ம பாவம், வறுமை நீங்கி எல்லா வளமும் பெறலாம் என்பது ஜதீகம். அதன்படி ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு திருவாரூர் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிசேகத்துடன், சமைக்கப்பட்ட அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ள மூலவர் வன்மீகநாதருக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின்னர் சமைக்கப்பட்ட அன்னத்தை சிவலிங்கத்திற்கு சாத்தப்பட்டு அன்னாபிசேகம் நடந்தது. இதே போல அசலேஸ்வரர் மற்றும் காசி விஸ்வநாதருக்கும் அபிசேகம் நடைபெற்று அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் திருவாரூர் கமலாலய குளத்தில் உள்ள நாகநாதர் கோவில், துர்க்காலயா ரோட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மற்றும் திருவாரூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிசேகம் நடந்தது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மூலக்கதை