நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் - வைகைச் செல்வன் தாக்கு
சென்னை,தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். இவர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்து வந்தார். சமீப காலமாக கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு மனோஜ் பாண்டியன் திடீரென வருகை தந்தார். பின்னர் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வரும் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர்களுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில், அவரது நெருங்கிய கட்சி நிர்வாகி மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், பாஜகவைச் சேர்ந்த கிளைக் கட்சி போல அதிமுக செயல்படுவதாகவும் விமர்சித்தார்.மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பதை அதிமுக நிர்வாகி வைகை செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். வைகை செல்வன் இதுதொடர்பாக கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. மனோஜ் பாண்டியனை எம்.பியாக்கியவர் ஜெயலலிதா. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதெல்லாம் யாரால் வந்தது என்ற நன்றி மறந்து, பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன்,” என்று விமர்சித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
