குஜராத்தில் தாயின் நினைவு நாளில் 290 விவசாயிகளின் கடனை அடைத்த தொழில் அதிபர்கள்
சூரத், குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர் பாபுபாய் ஜிராவாலா. இவரது சகோதரர் கன்ஷியாம். தொழிலதிபர்களான இருவரும் தனது தாயின் நினைவு நாளில் செய்யும் உதவி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என எண்ணினர். அமரேலியே சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலப்பத்திரத்திரங்களை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு அடகு வைத்தனர். விலை பத்திரங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்தால் அவர்களுக்கு கடன் உதவியோ அல்லது அரசு நலத்திட்ட உதவிகளோ கிடைக்கவில்லை. சுமார் 30 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது தொழிலதிபர்கள் பாபு பாய் ஜிராவால் மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் கவனத்திற்கு வந்தது. கிராமத்தில் இருந்த 290 விவசாயிகளை வரவழைத்து ரூ.90 லட்சம் கடனை கூட்டுறவு வங்கியில் கட்டி கடனை அடைத்தனர். பின்னர் அவர்களது நில பத்திரங்களை வாங்கி விவசாயிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். விவசாயிகள் அனைவரும் தொழில் அதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். இந்த சம்பவம் குஜராத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
