த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை கூடுகிறது: விஜய் உரையாற்றுகிறார்
சென்னை, கரூர் சம்பவத்திற்குப் பிறகு த.வெ.க. அரசியல் பணிகள் ஒரு மாதம் அமைதியாக இருந்தன. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் ரூ.20 லட்சம் நிதி மற்றும் மாமல்லபுரத்திற்கு குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்ததுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீடு, குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்கினார். இதைத் தொடர்ந்து கட்சி தலைவர் விஜய் அரசியல் பணிகளில் மீண்டும் வேகம் காட்டத் தொடங்கினார். கட்சியின் அன்றாட பணிகளை மேற்கொள்ள பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்தார். நிர்வாகக் குழுவின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து த.வெ.க. சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணி ஆகியவற்றில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து மீண்டும் கட்சித் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் தலைமையில் மக்கள் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் த.வெ.க.வினர் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் 2026 தேர்தல் வியூகங்கள் அமைப்பதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை காலை 9 மணிக்கு மாமல்லபுரம் ‘போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன்’ ஓட்டலில் நடைபெறுகிறது. கூட்டத்தில் சுமார் 2000 பேர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை கொண்டவர்கள் மட்டுமே கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுக்குழு கூட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் தங்குவதற்காக ஆங்காங்கே திருமண மண்டபங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் 2026 தேர்தல், மக்கள் பிரச்சினைகள், த.வெ.க. அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் மாநில அரசை கண்டித்து தீர்மானங்கள் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார். காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது. கட்சித் தலைவர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் என். ஆனந்த் தீவிரமாக செய்து வருகிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
