கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; 7 காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் 12 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

  தினத்தந்தி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; 7 காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் 12 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

சென்னை, கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக வேலுச்சாமிபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் சாலையோர கடை உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உள்ளிட்ட 306 பேருக்கு சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் தினமும் 10 முதல் 20 பேர் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 20 விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும் சிலரிடம் வீடியோவாகவும் வாக்குமூலம் செய்தனர்.இதற்கிடையே நேற்று சிபிஐ கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் மனோகரன், சிபிஐ வழக்கறிஞர் ஆகியோர் கரூர் குற்றவியல் நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட் பரத் குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.ஏற்கனவே கோர்ட்டில் சமர்பித்த ஆவணங்களில் சிலவற்றை வழக்கு விசாரணைக்காக கேட்டு பெற்றுச்சென்றதாக கூறப்பட்டது. இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் குழுவின ஒரு பிரிவினர் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்திற்கு நேற்று சென்றனர்.தொடர்ந்து இன்று கரூர் பயணியர் மாளிகையில் ஏற்கனவே சம்மன் அனுப்பியவர்களில் 20 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதற்காக கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டார்கள். கரூரில் சம்பவம் நடந்த அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 7 காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் 12 பேர் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.விசாரணைக்கு ஆஜர் ஆனவர்களிடம் கூட்ட நெரிசல் தொடர்பான பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. 7 காவல் உதவி ஆய்வாளர்களிடம் 4 மணி நேரமாக நடைபெற்ற பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை