சத்தியமங்கலம் அருகே பைக்கில் சென்ற தம்பதி மீது பாய்ந்த புலி-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான விலங்குகள் இருக்கின்றன. இதில் தண்ணீரை தேடி யானை, சிறுத்தை, புலி ஆகியவை வனப்பகுதி வழியாக செல்லும் திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து ஒரு புலி வெளியேறியது. பின்னர் அந்த புலி பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து கம்பீரமாக உட்கார்ந்து இருந்தது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் புலியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது திம்பத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு தம்பதி மோட்டார் சைக்கிளில் பண்ணாரி அருகே வந்து கொண்டு இருந்தனர். அவர்களை நோக்கி திடீரென புலி பாய்ந்தது. மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த பெண் புலியை பார்த்து அதிர்ச்சி அடைந்து கீழே குதித்தார். அப்போது உறுமியபடி அவர்களை நோக்கி புலி வந்தது. இருவரும் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தத்தால் காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி நிம்மதி பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். இந்த காட்சியை அந்த வழியாக காரில் வந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் யானைகள், சிறுத்தைகள் மட்டுமே அடிக்கடி சுற்றித்திரியும். இந்நிலையில் ரோட்டோரம் நின்ற புலி தம்பதி மீது பாய்ந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
