டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு; 14 பேர் உயிரிழப்பு

  தினத்தந்தி
டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு; 14 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கி அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நவராத்திரி விடுமுறையை கொண்டாட டார்ஜிலிங் சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள், தற்போது அங்கேயே சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மூலக்கதை