டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கனமழை மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து டார்ஜிலிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
மூலக்கதை
