2 வயது குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்கள் - அதிர்ச்சி சம்பவம்

  தினத்தந்தி
2 வயது குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்கள்  அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் டுமிர் சவ்ரஹா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 2 வயதில் சுந்தரம் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தை நேற்று காலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, அங்கு சுற்றித்திரிந்த 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் குழந்தையை கடித்துக்குதறின. இதில், குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பெற்றோரும், கிராமத்தினரும் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு குழந்தையின் முகம், கைகளை தெருநாய்கள் கடித்துக்கொண்டிருந்தன. உடனடியாக தெருநாய்களிடமிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தெருநாய்கள் கடித்ததில் குழந்தையின் முகத்தில் அதிக காயம் ஏற்பட்டதையடுத்து 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாகவும், டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறிய சமப்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை