பார்சலை கொடுத்துவிட்டு இளம்பெண்ணை பார்த்ததும்...டெலிவரி பாய் செய்த செயல்

மும்பை, தற்போது காய்கறி முதல் உணவு பொருட்கள் வரை நாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கி வருகிறோம். இந்த பொருட்களை டெலிவரி செய்ய பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று தான் பிளிங்கிட் (Blinkit). இந்தநிலையில், பிளிங்கிட் ஊழியர் ஒருவர் பார்சல் டெலிவரி செய்தபோது பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். பார்சலை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை பெறும்போது தொடக்கூடாத இடத்தை தொட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டெலிவரி செய்ய போன பிளிங்கிட் ஊழியர், அந்த பெண்ணிடம் பணம் பெறுகிறார். இந்த சமயத்தில் தொடக்கூடாத இடத்தை அந்த ஊழியர் தொடுகிறார். பயந்துபோன பெண் சற்று பின்நோக்கி செல்வது பதிவாகி உள்ளது. மேலும் அந்த பதிவில் அந்த பெண், இன்று பிளிங்கிட்டிடம் இருந்து ஆர்டர் பெறும்போது எனக்கு நேர்ந்த சம்பவம் இதுதான். டெலிவரி செய்ய வந்த நபர் எனது முகவரி கேட்டார். மேலும் தொடக்கூடாத இடத்தில் தொட்டார். இதனை ஏற்கவே முடியாது. பிளிங்கிட் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் கேலிக்கூத்தாக உள்ளதா? '' என பிளிங்கிட் நிறுவனத்தை ‛டேக்' செய்து கேள்வி கேட்டு இருந்தார். இந்தநிலையில், டெலிவரி பாய் செய்த வீடியோவை பகிர்ந்த நிலையில் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.This is what happened with me today while ordering from Blinkit. The delivery guy asked for my address again and then touched me inappropriately. This is NOT acceptable. @letsblinkit please take strict action. #Harassment #Safety @letsblinkit ...is women safety is joke in India? pic.twitter.com/aAsjcT3mnO
மூலக்கதை
