உ.பி.: பயிற்சி மையத்தில் செப்டிக் டேங்க் வெடித்து 2 பேர் பலி; 5 பேர் காயம்

பரூக்காபாத்,உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத் நகரில் கத்ரி கேட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கல்வி பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் கழிவுநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில், அது திடீரென வெடித்து சிதறியது. இதுபற்றி பரூக்காபாத் எஸ்.பி. ஆர்த்தி சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, பயிற்சி மையத்தில் இருந்து அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறி உள்ளது. சுவிட்ச் போர்டு ஒன்றும் அந்த பகுதியில் இருந்துள்ளது. இதனால், அது வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என கூறினார்.
மூலக்கதை
