துர்கா சிலை கரைப்பின்போது மோதல்: 7 பேருக்கு கத்திக்குத்து

  தினத்தந்தி
துர்கா சிலை கரைப்பின்போது மோதல்: 7 பேருக்கு கத்திக்குத்து

ராஞ்சி,நாடு முழுவதும் நேற்று முன் தினம் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. விஜயதசமிக்கு மறுநாளான நேற்று வட மாநிலங்களில் துர்கா சிலைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் மாவட்டம் ஹரிஜன் பகுதியை சேர்ந்த சிலர் அப்பகுதியில் உள்ள நீர்நிலையில் துர்கா சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டது. சிலையை கரைத்து விட்டு அதே வழியில் திரும்பி வந்தபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூலக்கதை