இங்கிலாந்து பிரதமர் அடுத்த வாரம் இந்தியா வருகை

டெல்லி, இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் செயல்பட்டு வருகிறார். அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், 2 நாட்கள் அரசுமுறை பயணமாக கெய்ர் ஸ்டார்மர் அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். பிரதமராக பதவியேற்றப்பின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். வரும் 8ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். கெய்ர் ஸ்டார்மரும், மோடியும் 9ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மூலக்கதை
