கோவில்பட்டி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்குப்போட்டு தற்கொலை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சித்துராஜபுரம், கண்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் விக்னேஷ் (வயது 36). 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக இருந்தார். இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த மகாலட்சுமிக்கும் 2016-ல் திருமணமானது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகாலட்சுமி குழந்தைகளுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். இந்த தம்பதியிடையே சொத்து விவகாரத்தில் பிரச்சினை இருந்ததாம். இதனிடையே மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமியின் வீட்டில் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மகாலட்சுமி அவரது தங்கையை வைத்து விக்னேஷ் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷை கைது செய்தனர். இதனையடுத்து விக்னேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர், கோவில்பட்டி லட்சுமிபுரம் மேலகாலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
