திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலம், விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது தொடர் விடுமுறையால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகின்றனர். இன்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதனால் கடற்கரையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புனித நீராடிய பிறகு பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக வந்திருந்த பக்தர்கள் பலரும், சூரசம்ஹாரம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரத்தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நின்று ஊர்ந்தபடியே சென்றதை பார்க்க முடிந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
