காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வன்னி மர பார் வேட்டை உற்சவம்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவாக விஜயதசமியன்று வன்னிமர பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. வன்னிமர பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளை பட்டு உடுத்தி மலர் மாலைகள், திருவாபரணங்கள், வாள். கேடயம் அணிவித்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர். தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், மேள தாள வாத்தியங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டினர் பாடி வர, சன்னதி வீதி மற்றும் நான்கு மாட விதிகளில் உலா வந்து கோவிலுக்கு திரும்பினார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தருகே எழுந்தருளிய பெருமாள், வில்லேந்தி வன்னி மரத்தின் மீது அம்பு எய்தி வன்னி மர பார்வேட்டை கண்டருளினார். வன்னிமர பார்வேட்டை உற்சவத்திற்காக தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளுக்கு வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை காட்டி வணங்கி வழிபட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
