சேவைக் குறைபாடு: மின் நுகர்வோருக்கு மின்வாரியம் ரூ.62 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த பிச்சம்மாள், அய்யனேரி கிராமத்தில் உள்ள தனது நிலத்தின் மேல்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி வடத்தை மாற்றுவதற்காக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளரிடம் விண்ணப்பித்தார். அந்த இடத்தை அலுவலர்கள் பார்வையிட்டு, மின்கம்பி வடத்தை மாற்றுவதற்கான செலவு குறித்து கூறினர். பிச்சம்மாள் பணத்தை செலுத்தியதையடுத்து, மின்கம்பி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் தவறான கணக்கீட்டின் அடிப்படையில் அதிக பணம் பெறப்பட்டதாகத் தெரியவந்ததால், பிச்சம்மாள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், அவர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர், மனுதாரர் செலுத்திய மொத்தத் தொகையில் மீதித் தொகையான ரூ.27,152, சேவைக் குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.62,152-ஐ 6 வாரத்துக்குள் வழங்குமாறும், இல்லையெனில் தொகையை செலுத்தும் தேதிவரை 9 சதவீத வட்டியுடன் வழங்குமாறும் மின்வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
