அனுமதி இன்றி பயிற்சியில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது
சென்னை, ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா, பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள் விழாவையொட்டி சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களாக குருபூஜை மற்றும் சாகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். ஆனால் அவர்கள் உரிய அனுமதி இன்றி அரசு பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி நிகழ்ச்சி நடத்தியதாக கூறி அவர்களை நேற்று போரூர் போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருடன் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 47 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அய்யப்பன்தாங்கலில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் பா.ஜதனா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கைதான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “வழக்கமாக பயிற்சி செய்யும் இடத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. கஞ்சா விற்பவர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியான பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
