உலக பெரும் பணக்காரர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லாரி எலிசன்

  தினத்தந்தி
உலக பெரும் பணக்காரர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லாரி எலிசன்

வாஷிங்டன், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், எலான் மஸ்க்கை முந்தி, உலகின் நம்பர் 1 பணக்காரராக மாறியுள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் அதிகரித்ததால், இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தில் 41 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் எலிசன். 81 வயதான எலிசனின் சொத்து மதிப்பு தற்போது 393 பில்லியன் டாலராக (சுமார் ரூ.34 லட்சம் கோடி) உள்ளது. இதன் மூலம் 384 பில்லியன் டாலர்களை கொண்டுள்ள மஸ்க்கை அவர் முந்தியுள்ளார். தற்போது எலிசன் மற்றும் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மெட்டா நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருவது ஆரக்கிள். அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் இதன் இணை நிறுவனராக லாரி எலிசன் உள்ளார்.

மூலக்கதை