சென்னையில் திருடு போன சொகுசு கார் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு
சென்னை, சென்னையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி அண்ணா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமானது. இதையடுத்து, காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த காரை கடத்திச் சென்றது சத்தேந்திர செகாவத் என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கடந்த 20 வருடங்களாக கார் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், குறிப்பாக சொகுசு கார்களை குறிவைத்து திருடியதும் தெரியவந்தது. 120-க்கும் மேற்பட்ட கார்களை திருடி, வட இந்தியாவில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து, திருடப்பட்ட காரை வட இந்தியாவில் போலீசார் தேடி வந்தனர். கடந்த 80 நாட்களுக்கும் மேலாக வடமாநிலங்களில் முகாமிட்டு, காரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜெய்சல்மர் மாவட்டத்தில் காரை போலீசார் கண்டறிந்து பின்தொடர்ந்த போது, காரை விட்டுவிட்டு ஓட்டிச்சென்றவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து, இந்த காரை மீட்டு போலீசார் சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
