திருநெல்வேலி: வரதட்சணை கொடுமை வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
கடந்த 2011-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி, எடுப்பூரை சேர்ந்த முத்துபாண்டி (வயது 52) என்பவர் தனது மனைவியை வரதட்சணை கொடுமை செய்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட வழக்கில், நாங்குநேரி குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினை நீதிமன்ற நடுவர் பூமிநாதன் வழங்கினார். நாங்குநேரி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான முத்துப்பாண்டி மற்றும் அவரது இரண்டாவது மனைவி சசிகலா ஆகிய 2 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த டி.எஸ்.பி. விஜயகுமார் (தற்போது ஓய்வு) மற்றும் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் காவல்துறையினரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் அனிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
