கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு: பயணிகள் வரவேற்பு
சென்னை, சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே தினமும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், தற்போது இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மஞ்சள் நிறத்திலான பழைய பெட்டிகளே இணைக்கப்பட்டிருந்தன. தற்போது, சிகப்பு நிறத்தில் எடை குறைந்த எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்கள் 16101/16102) ரெயில் பெட்டிகள் எல்.எச்.பி. (சிகப்பு நிறம்) பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட இருக்கின்றன. சென்னையில் இருந்து செல்லும் ரெயிலில் வரும் 18-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து 19-ந் தேதி முதல் இதே பெட்டிகளுடன் ரெயில் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
