திண்டிவனம் நகராட்சி தலைவரின் சாதி வெறிச் செயல்: முத்தரசன் கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டிவனம் நகராட்சி தலைவர் ரம்யா, சென்ற மாதம் 28-ம் தேதி நகராட்சி ஊழியர் முனியப்பனை அழைத்து, பழைய கோப்பு ஒன்றை எடுத்து வருமாறு கூறியுள்ளார். தலைவர் கோரிய கோப்பினை தேடி எடுத்து வருவதற்குள் அவரை அதிகாரத் தோரணையில் அழைத்து, நகராட்சி ஆணையர் அறைக்கு அழைத்து சென்று, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளார். தவறேதும் செய்யாத நிலையிலும் ஊழியர் முனியப்பன், சூழல் நிர்ப்பந்தத்தில் மன்னிப்பும் கோரியுள்ளார். இருப்பினும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, ஊழியரின் சாதி, அவரது பிறப்பு, குடியிருப்பு எல்லாவற்றையும் இழிவுபடுத்தி பேசியதுடன், அவர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதற்கு நகராட்சி ஊழியர்கள் நெடுமாறன் உட்பட சிலர் ஆதரவு காட்டியுள்ளனர். நகராட்சி தலைவரின் கணவர் மரூர் ராஜா சாதி ஆதிக்கத்தை காட்டியுள்ளார். மக்கள் நலனையும், ஊழியர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய நகராட்சி தலைவரும், அவரோடு இருந்த கும்பலும் நடத்திய வன்முறைச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட ஊழியர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலகத்தை வன்முறை களமாக மாற்றி, சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க விடாமல் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
