நெல்லை பல்கலைக்கழகத்தில் மோதல் சம்பவம்; 14 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் வர தடை
பேட்டை, நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, விசாரணை முடியும் வரை 14 மாணவர்கள் வகுப்புகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 29ம் தேதி, வரலாற்றுத்துறை மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டடனர். மாணவர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 2ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கின. மாணவர்கள் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் விசாரணை முடியும் வரை மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 14 மாணவர்கள் வகுப்புகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. விசராணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என பல்கலைக்கழக வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
