ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து துறை ரீதியிலான விசாரணை நடந்தது வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற மே மாதத்துடன் ஜெயராம் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
