ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

  தினத்தந்தி
ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்  மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்! ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023) 2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024) 3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025) 4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில்... இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை! திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஒரு காணொலி காட்சி ஒன்றையும் அவர் டேக் செய்துள்ளார்.ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்!ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023)2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024)3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர்… pic.twitter.com/Zob3JytcYx

மூலக்கதை