ரூ.22 கோடியில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்: 31-ந் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சிவகங்கை,சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடங்களில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த திறந்தவெளி அருங்காட்சியகம் 2 அரங்குகளாக அமைக்கப்பட்டு, அகழாய்வு தளங்கள் கண்ணாடி தளமாக மாற்றப்பட்டது. அங்கு அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழர்களின் பழங்கால நாகரிகம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோரின் முயற்சியாலும் கீழடி அகழாய்வு வெகுவிரைவாக, நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் பல்வேறு அரிதான பொருட்கள் கிடைத்தன. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்த வேண்டும். கீழடி அருங்காட்சியகத்திற்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.6 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. திறந்தவெளி அருங்காட்சியகம் 5,914 சதுர மீட்டரில், ரூ.22 கோடியில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம் அமைய பெற்றிருப்பது தமிழ்நாட்டில்தான். குறிப்பாக கீழடியில் மட்டுமே. இந்த பணிகளை பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் எ.வ.வேலு பலமுறை ஆய்வு செய்துள்ளார். இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தை வருகிற 31-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பார்வையிட்டு திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
