3 மாதங்களுக்கு முன்பு கடித்த கீரிப்பிள்ளை.. உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன்.. அடுத்து நடந்த துயரம்
திருவாரூர், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் புதுத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி தேவி. இவர்களுடைய மகன் நவீன் (வயது7) அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். முத்து தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் முத்து மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கோழியை பிடிப்பதற்காக வந்த கீரிப்பிள்ளை, அங்கு தூங்கி கொண்டிருந்த சிறுவன் நவீனின் கையை கடித்து விட்டது. கீரிப்பிள்ளை கடித்த உடன் சிறுவன் வலி தாங்காமல் துடிதுடித்தான். இதையடுத்து அந்த சிறுவனுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் அதிகமானது. உடனடியாக பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சிகிச்சை பெற்று வந்துள்ளான். நேற்று முன்தினம் நள்ளிரவு காய்ச்சல் அதிகமாகி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சிறுவன் உடல் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கீரிப்பிள்ளை கடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் திடீரென இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
