தூத்துக்குடியில் 890 பேருக்கு காவலர் உடல் தகுதி தேர்வு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 9.11.2025 அன்று நடந்தது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 890 விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று (27.1.2026) துவங்கி 29.1.2026 வரை நடைபெற உள்ளது. மேற்சொன்ன உடல் தகுதி தேர்வு இன்று ஈரோடு சிறப்பு அதிரடிப்படை (Special Task Force) ஐ.ஜி. மயில்வாகனன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 450 விண்ணப்பதாரர்களுக்கு இன்றும் (27.1.2026), 440 விண்ணப்பதாரர்களுக்கு நாளையும் (28.1.2026) உடற் தகுதி தேர்வு (Physical Measurement Test) நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சிபெறும் விண்ணப்பதார்கள் அடுத்த நாட்களில் நடைபெறும் உடற் திறனாய்வு (Physical Efficiency Test) தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த உடற்தகுதி தேர்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணி அலுவலர்கள், காவலர்கள் ஆகியோர் உடற்தகுதி தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
