குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் ரகுநாத் (வயது 25), கூலித் தொழிலாளி. இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரகுநாத், மனைவி இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரகுநாத் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று ரகுநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
