ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
நாமக்கல்,நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாலப்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; "அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது யதேச்சையாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார். பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
